வரலாற்றில் இன்று 12.11.2016
நவம்பர் 12 கிரிகோரியன் ஆண்டின் 316 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 317 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 49 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
764 – திபெத்தியப் படைகள் சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை கைப்பற்றின.
1906 – பாரிசில் அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டியூமொண்ட் வானூர்தி ஒன்றைப் பறக்கவிட்டார்.
1918 – ஆஸ்திரியா குடியரசாகியது.
1927 – மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.
1927 – லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
voyager1
1980 – நாசாவின் வொயேஜர் 1 சனிக்கோளுக்கு மிக அருகில் சென்று  படங்களை பூமிக்கு அனுப்பியது.
1981 – கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை  ஆரம்பித்தது.
1982 – போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா விடுதலையானார்.
1990 – இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்.
1994 – இலங்கையின் 5வது அரசுத் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.
1996 – சவுதி அரேபியாவின் போயிங் விமானமும் கசக்ஸ்தானின் இல்யூஷின் விமானமும் புது டில்லிக்கு அருகில் நடுவானில் மோதிக் கொண்டதில் 349 பேர் கொல்லப்பட்டனர்.
1998 – கியோட்டோ பிரகடனத்தில் ஆல் கோர் கையெழுத்திட்டார்.
2001 – நியூயோர்க் நகரில் டொமினிக்கன் குடியரசு நோக்கிச் சென்ற அமெரிக்க விமானம் விபத்து
பிறப்புக்கள்

வல்லிக்கண்ணன்
வல்லிக்கண்ணன்

1817 – பஹாவுல்லா, பஹாய் சமயத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1892)
1866 – சுன் இ சியன், சீனாவின் புரட்சித் தலைவர் (இ. 1925)
1896 – சலீம் அலி, இந்திய பறவையியல் வல்லுநர் (இ. 1987)
1920 – வல்லிக்கண்ணன், தமிழ் எழுத்தாளர் (இ. 2006)
இறப்புகள்
2001 – சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி, இந்து அமெரிக்க ஆன்மிகவாதி (பி. 1927)
சிறப்பு நாள்
பஹாய் நம்பிக்கை – புனித நாள் (பஹாவுல்லா பிறந்த நாள்)
உலக நுரையீரல் அழற்சி நாள் – ஐக்கிய நாடுகள்
lungs