வரலாற்றில் இன்று 03.12.2016
டிசம்பர் 3 கிரிகோரியன் ஆண்டின் 337 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 338 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 28 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1818 – இலினோய் ஐக்கிய அமெரிக்காவின் 21வது மாநிலமானது.
1904 – வியாழனின் ஹிமாலியா என்ற சந்திரன் சார்ல்ஸ் டில்லன் பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1917 – 20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் கியூபெக் பாலம் திறக்கப்பட்டது.
1944 – கிறீசில் கம்யூனிஸ்டுக்களுக்கும் அரச படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் வெடித்தது.
1971 – இந்தியா கிழக்கு பாகிஸ்தானை முற்றுகையிட்டது. முழுமையான போர் ஆரம்பித்தது.
1973 – வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது
1984 – இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.
1999 – செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்ட Mars Polar Lander இன் தொடர்புகளை நாசா இழந்தது.
2007 – இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.
பிறப்புகள்
1795 – ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர், இங்கிலாந்தைச் சேர்ந்தவர் (இ. 1879)
1884 – ராஜேந்திர பிரசாத், இந்தியாவின் முதலாவது ஜனாதிபதி (இ. 1963)
rajendra-prasath
இறப்புகள்
1552 – புனித பிரான்சிஸ் சவேரியார், மதப் போதகர் (பி. 1506)
சிறப்பு நாள்
அனைத்துலக ஊனமுற்றோர் நாள்