திருச்செந்தூர் : இன்று சூரசம்ஹாரத் திருவிழா

திருச்செந்தூர்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹார திருவிழா நடைபெறுகிறது.

கடந்த 8 ஆம் தேதி முதல் கந்த சஷ்டி விரதம் தொடங்கி உள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோவிலில் இந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று முருகப் பெருமான் சூரனை வதம் செய்த நிகழ்வு திருச்செந்தூரில் கொண்டாடப்படுகிறது.

இன்று காலை 1 மணிக்கு கோவில் நடை திறப்பு நடந்தது. அதன் பிறகு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை மற்றும் 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. மக்கள் பெரும் திரளாக கூடி இந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 4 மணிக்கு மேல் கடற்கரையில் சூர சம்ஹார திருவிழா நடைபெற உள்ளது. சூரனை வதம் செய்த பிறகு சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதன் பிறகு சுவாமி அம்பாளுடன் புஷ்ப தேரில் திருவீதி உலா நடைபெறும்.

இந்த சூர சம்ஹாரத்தை காண தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் இலங்கை மற்றும் மலேசிய நாடுகளில் இருந்தும் மக்கள் வந்து குவிந்துள்ளனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Today soora samharam at Thiruchendur temple
-=-