சென்னை:
மிழகத்தில்  கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சம்பெற்று வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும்  4985 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1,75,678 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 70 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2551 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உள்பட 4,985 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 70 பேர் உயிரிழந்தனர்.  இவர்களில் 21 பேர் தனியார் மருத்துவமனையிலும், 49பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,551ஆக அதிகரித்துள்ளது.
இன்று 3,861 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர் களின் மொத்த எண்ணிக்கை 1,21,776 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 57.93% ஆக உள்ளது.
தற்போது 51,348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,921பேர் ஆண்கள், 2,064 பேர் பெண்கள்.
இன்று ஒரே நாளில் 52,087 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,84,579 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 112 அரசு மற்றும் தனியார் சோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 19,06,617 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 52,087 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 4,985 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,06,828 ஆண்கள், 68,827 பெண்கள், 23 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களைச் சேர்ந்த 5 பேர்,  மாவட்டங்களைச் சேர்ந்த 50 பேர் என மொத்தம் 55 பேருக்கு  இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கேரளா – 03, கர்நாடகா – 26, தெலுங்கானா – 01,  ஆந்திரப்பிரதேசம் – 08, பீகார் – 05. புதுச்சேரி – 01,  ஜார்கண்ட் – 01,  ஜம்மு காஷ்மீர் – 02, மேற்குவங்கம் – 01,  ஒடிசா – 02
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்:  ஓமன் – 02, சவூதி அரேபியா – 02 ஐக்கிய அரபு நாடுகள் – 01