டில்லி

டில்லியில் இன்று 1075 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை  1.30,606 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி மூன்றாம் இடத்தில் உள்ளது.

இன்று டில்லியில் 1075 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,30,606 ஆகி உள்ளது.

இன்று 21 பேர் மரணம் அடைந்து மொத்தம் உயிர் இழந்தோர் எண்ணிக்கை  3827 ஆகி உள்ளது.

இன்று 1807 பேர் குணம் அடைந்து மொத்தம் 1,14,875 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 11,904 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டில்லியில் 714 பகுதிகள் அதிக கொரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.