ஜல்லிக்கட்டு தடை காரணமாக தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தடையை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறுவதுடன், தடையை மீறி பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடக்கின்றன. இதையடுத்து கைது நடவடிக்கையும், தடியடியும் தொடர்கின்றன.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தடையை நீக்க, என்ன செய்ய வேண்டும் என்று சட்டவல்லுனர்களிடம் கேட்டபோது…

ஜல்லிக்கட்டு

‘ஜல்லிக்கட்டு’ என்றால் என்ன?
சீறிப்பாய்ந்து வரும் ஜல்லிக்கட்டு காளையை மாடுபிடி வீரன் அணைக்க வேண்டும். அப்படியே அணைத்து 15 மீட்டர் தூரம் சென்றுவிட்டான் என்றாலோ.. அல்லது மாட்டை அணைத்தவாறே மூன்று சுற்று வரைக்கும் தாக்குபிடித்துவிட்டான் என்றாோ அவன் வெற்றி பெற்றவன் ஆகிறான்.
மாடுபிடி வீரன் மாட்டினை அணைக்காவிட்டால் மாடு வென்றுவிட்டதாக பொருள். இதற்கு பெயர்தான் ஜல்லிக்கட்டு. இந்த விளையாட்டில் ஒரு மாட்டுக்கு மொத்த கால அவகாசம் ஐம்பது வினாடிகள் மட்டுமே.

ஜல்லிக்கட்டில் மாடுகளுக்கு கொடுமை நேர்கிறது என்று சொல்லப்படுவது பற்றி?

எந்தக் கொடுமையும் நடைபெறவில்லை. ஒரு மாட்டுக்கு மொத்த நேரமே ஐம்பது விநாடிகள்தான்.

 

இதில் எப்படி கொடுமை நடக்கும்?
ஆனால் அப்படிப்பட்ட வாதம்தானே, ‘ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்களால் வைக்கப்படுகிறது!

கடந்த வருடத்தில் இந்தியாவில் இருந்து 29,000 இலட்சம் டன் அளவுக்கு மாட்டு இறைச்சி ஏற்றுமதி ஆகியிருக்கிறது. உலகளவில் இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி சதவீதம் 23% ஆகும்.

வருடத்துக்கு இத்தனை மாடுகளை குவியல் குவியலாகக் கொன்றுவிட்டு ஜல்லிக்கட்டு விளையாட்டை கொடுமை என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல.. மாடுகளை கொல்லும்போது அளவுக்கு மீறி கொடுமைப்படுத்த கூடாது என்று விதிகள் உள்ளன. ஆனால் மாட்டிறைச்சிக் கூடங்களில் இந்த விதிகள் பின்பற்றப்படுவது இல்லை.

மாடுகளை தலைகீழாக கட்டி விட்டு, தலையை அறுத்து, உயிருடன் இருக்கும்போதே தோலை உரித்து இறைச்சியை பிய்த்து எடுக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் உலவுகின்றன.

” ‘ஜல்லிக்கட்டுக்கு தடை விவகாரத்தில் விலங்கு நல அமைப்பினரின் செயல்பாடு பற்றி உங்கள் கருத்து என்ன?”

”விலங்குகள் நல வாரியம், பீட்டா என்கிற வெளிநாட்டு அமைப்புடன் சேர்ந்து இணைந்து செயல்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டை இதுவரை பார்க்காதவர்கள், தமிழ் பேசாதவர்கள், ஏன்… இதுவரை தமிழ்நாட்டுக்கே வராதவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஜல்லிக்கட்டை எதிர்க்கிறார்கள். இவர்களது நோக்கம் நாட்டு மாடுகளை மொத்தமாக அழிக்க வேண்டும் என்பதுதான்.
‘மத்திய மாநில ஆட்சியாளர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். நீதிமன்றத்தை சுட்டிக்காட்டுகிறார்கள். இவர்கள் ஏதும் செய்ய முடியாதா?
செய்திருக்கலாம். தமிழக அரசு, தன்னுடைய சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற அனுப்ப வேண்டும். அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துவிட்டால் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஜல்லிக்கட்டு நடத்தலாம். இதை முன்பே செய்திருக்க வேண்டும்.
தற்போது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு சட்டப்படி ஜல்லிக்கட்டு நடத்த சட்ட மாறுதல் கொண்டு வரலாம். காட்சிப் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும். ஜனாதிபதியை வைத்து ‘ஆர்டினன்ஸ்’ ஆவது கொண்டு வரலாம். ஆனால் கடந்த ஆண்டுகூட, இப்படி செய்யாமல், வெறும் அறிவிப்பு செய்தது மத்திய அரசு.
இனியேனும் மத்திய அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.