சென்னை: ”நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளோம் என்றும்,  நீட் விவகாரத்தில் முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம்” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு மத்தியஅரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்ச்ர, நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்ததுடன், இதுதொடர்பாக விலக்கம் கேட்டு தமிழகஅரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஏற்கனவே செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  நீட் தேர்வு தகுதியின் அடிப்படையிலான தேர்வு  கூறியிருப்பதுடன்,  இது தேசியக் கல்விக் கொள்கைக்கு முரணாக உள்ளதா என  கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா மத்தியஅரசின் அரசின் வரம்பிற்குள் வந்துள்ளதா அல்லது மாநிலஅரசின் வரம்பிற்குள் வந்துள்ளதா  என்பது உள்ளிட்ட விவரங்களை மத்தியஅரசின் சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகிய 2 துறைகள் கேள்வி எழுப்பி உள்ளது அதற்கு பதில் அளிக்க உள்ளதாகவும்,   நீட் விலக்கு பெறுவதற்கு,  மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி முதல்வர் முதலமைச்சரின் ஒப்புதலுக்கு பிறகு ஒன்றிய அரசுக்கு விரைவில் தமிழக அரசின் பதில் கடிதம் அனுப்பப்படும் என கூறினார்.

இந்த நிலையில், ”நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளோம் என்றும்,  நீட் விவகாரத்தில் முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம்” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.