தமிழக ஆளுநர் நாளை பிரதமரை சந்திக்கிறார்

 

டில்லி

பிரதமர் மோடியை நாளை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க உள்ளார்.

ஆளுநர் மாநாட்டில் கலந்துக் கொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டில்லி சென்றுள்ளார்.   நேற்றுடன் இந்த மாநாடு முடிவடைந்தது.

இன்று அவர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பலருடன் சந்திப்பு நிகழ்த்தி உள்ளார்.

நாளை தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.   இந்த சந்திப்பு நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Tags: TN Governor to meet Modi tomorrow