திருவண்ணாமலை: ஈசனின் அக்னிஸ்தலமான  அண்ணாமலையார் வீற்றிருக்கும் மலையில் கடந்த 6ந்தேதி ஏற்றப்பட்ட மகாதீபம் இன்று 4வது நாளாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது பெய்யும் மழையிலும் மகாதீபம் அணையாமல் எரிந்துகொண்டே பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறது. இரு பக்தர்களிடையே ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கார்த்திகை தீபத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்  10 நாட்கள் திருவிழாவான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழாவின்  முக்கிய நிகழ்ச்சியான அண்ணாமலையார் மலையின் 2,668 அடி உயர;ததில்   மகா தீபம் கடந்த 6-ந் தேதி மாலை  ஏற்றப்பட்டது. இந்த தீபத்தை காண அன்றைய நாள் மட்டும் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கோவிலுக்கு வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த மகாதீபமான 11 நாட்கள் எரிந்துகொண்டிருக்கும் என்பதால், தினசரி பல ஆயிரம்பேர் கோவிலக்கு வந்து, கிரிவலம் செல்வதுடன், மகா தீபத்தையும் தரிசித்து சிவனின் ஆசி பெற்று செல்கின்றனர்.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் 4-ம் நாளான இன்றும் மலை உச்சியில் மகா தீபம் சுடர் விட்டு எரிந்து வருகிறது. மாண்டஸ் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இருந்தால், மழையால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், மகா தீபம்  தொடர்ந்து, எரிந்து வருகிறது. இதனை பொதுமக்கள் கண்டு களித்து தரிசனம் செய்து வருகின்றனர்.

8லட்சம் பேர் தரிசனம் செய்த திருவண்ணாமலை மகா தீபம் – 11 நாட்கள் எரியும் சிறப்பு வாய்ந்தது…