திருப்பதி கோவில் கும்பாபிஷேகம்: குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தரிசனம்

திருப்பதி :

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேசகம் நடைபெறுவதை யொட்டி நாளை முதல் வரும் 16ந்தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ஏழுமலையான் கோவில் கும்பா பிஷேசகம் காரணமாக  ஆகஸ்ட் 11 ம் தேதி முதல் ஆகஸ்ட் 16 ம் தேதி வரை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்   ஆகஸ்டு 16-ந் தேதி மகா சம்ப்ரோஷ்ணம் எனும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதன் காரணமாக நாளை முதல் (ஆகஸ்டு 11-ந் தேதி)  அங்குரார்ப் பணம் நடக்கிறது. அதனை தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடக்கிறது. 150-க்கும் மேற்பட்ட வேதபண்டிதர்கள் வேதமந்திரங்கள் முழங்க இந்த பூஜைகளை நடத்துகின்றனர். கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த பூஜைகள் நடத்தப்படுகிறது. யாகசாலை பூஜைகள் முடிந்த பின்னர் 16-ந் தேதி காலை 10.16 மணியளவில் துலா லக்னத்தில் மூலவர் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்கிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Tirupati Temple Kumbabishekam: Darshan for Particular time only, திருப்பதி கோவில் கும்பாபிஷேகம்....பக்தர்கள் தரிசனம் 9 நாட்களுக்கு ரத்து
-=-