திருமலை:
திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பில்,விடுமுறை நாட்கள் என்பதால் திருப்பதி கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இதனால், சுமார் 7 கிலோமீட்டர் நீளத்துக்கு வரிசை காத்திருக்கிறது. இலவச தரிசனம் செய்ய 48 மணி நேரம் ஆவதாக கூறப்படுகிறது.

பொதுவாக வைகுண்ட ஏகாதசி மற்றும் கருடசேவை நாள்களில்தான் திருமலையில் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள். ஆனால் கடந்த இரண்டு நாள்களிலும் அதைவிட அதிகமான அளவில் பக்தர்கள் குவிந்திருப்பதால் தரிசனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

தேவஸ்தானம், பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் தயார் செய்து விநியோகித்து வருகிறது.

குறிப்பாக விஐபி பக்தர்கள். சாதாரண பக்தர்கள் ஆகியோர் தங்களது திருமலை யாத்திரை திட்டத்தை மாற்றி அமைத்து கொள்ள தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.