உத்திரப்பிரதேச கிராமத்தில் புலியை அடித்துக் கொன்ற கிராமவாசிகள்

Must read

பிலிபித்

த்திரப்பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் ஒரு புலியை கிராமவாசிகள் அடித்துக் கொன்றது வீடியோ பதிவாகி வைரலாகி வருகிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபித் மாவட்டத்தில் புலிகள் சரணாலயம் ஒன்று உள்ளது.  லக்னோவில் இருந்து சுமார் 240 கிமீ தூரத்தில் உள்ள இந்த சரணாலயம் அருகே மாடெய்னா என்னும் ஒரு சிற்றூர் உள்ளது.  சரணாலயத்தில் இருந்த பெண் புலி ஒன்று சிற்றூருக்குள் நுழைந்துள்ளது.   இந்த புலியைக் கண்ட கிராமவாசிகள் சூழ்ந்து நின்று தாக்கி உள்ளனர்.

விவரம் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று புலியை காக்க முயன்றுள்ளனர்.  ஆனால் புலியை கிராமவாசிகள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.  படுகாயம் அடைந்த புலி மரணம் அடைந்துள்ளது.  அதன் பிறகு புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் எரியூட்டப்பட்டது.

பிரேத பரிசோதனையில் கொல்லப்பட்ட புலியின் வயது 6 எனவும் விலா எலும்புகள் முறிவு மற்றும் பலத்த காயங்களால் புலி மரணமடைந்தது தெரிய வந்துள்ளது.   மக்கள் புலியைத் தாக்கி கொன்ற  சம்பவம் வீடியோ படமாக்கப்பட்டு வைரலாகி வருகிறது.   இந்த வீடியோ மூலம் புலியை தாக்கிய 31 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

 

[embedyt]https://youtu.be/hSzm9tX5JUM[/embedyt]

 

More articles

Latest article