சென்னை: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே சென்னையில் நடைபெறும் 3-வது ஒருநாள் ஆட்டத்துக்கான  டிக்கெட் விற்பனை தேதிகள் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, மார்ச் 13ந்தேதி முதல் ஆன்லைனிலும், மார்ச் 18ந்தேதி  கவுண்டரிலும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் ஆட்டம் சென்னையில் மார்ச் 22 அன்று நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டு உள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளும் மோதும் 4-வது டெஸ்ட் இன்று நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, 3வது ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் 1டேடியத்தில், மார்ச் 22ந்தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்து டிக்கெட் விற்பனை தொடர்பான அறிவிப்பை சென்னை கிரிக்கெட் சங்க தலைவர் அஜய் சீனிவாசன் வெளியிட்டுள்ளார்.

அதன்படி,  சென்னை ஒருநாள் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 13 அன்று பேடிஎம் மற்றும் இன்சைடர் இணையத்தளம் வழியாக விற்கப்படும் என அறிவித்துள்ளார். அத்துடன், மார்ச் 18 அன்று டிக்கெட்டுகள் மைதானத்தில்  விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம், காலை 11 மணி முதல் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.

டிக்கெட்டுகளின் குறைந்த விலை – ரூ. 1200, அதிக விலை – ரூ. 10,000,  ரூ. 1200 டிக்கெட்டை மார்ச் 18 அன்று நேரில் சென்றுதான் வாங்க முடியும்.

இணையம் வழியாக ரூ. 1500, ரூ. 3000, ரூ. 5000, ரூ. 6000, ரூ. 8000, ரூ. 10000 மதிப்புகளை டிக்கெட்டுகளை வாங்க முடியும்.

அத்துடன்,  ஒருநாள் ஆட்டத்தைக் காணப்போகும் ரசிகர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. வெளியிலிருந்து உணவு எதுவும் கொண்டுவரக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

ஆட்டம் நடைபெறும் மார்ச் 22 அன்று காலை 11.30 மணி முதல் ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.