கலிபோர்னியா மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு: 12 பேர் பலி

தவுசண்ட் ஓக்ஸ்:

மெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள தவுசன்ட் ஓக்ஸ் பகுதியில் செயல்பட்டு வந்த மதுபான விடுதி (பார்) மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் போலீஸ்கார் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது பொதுமக்கள், பள்ளி மாணவர்களும் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி வருகின்றனர்.

இந்த நிலையில், கலிபோர்னியாவில் இருந்து சுமார் 40 மைல் தொலைவில் உள்ள தவுசன்ட் ஓக்ஸ் என்ற பகுதியில் உள்ள பார்டர் லைன் பார் அன்டு கிரிள் என்ற மதுபான விடுதிக்குள் புகுந்த மர்ம நபர் நள்ளிரவு 11.20 மணி அளவில் அங்கு மதுபானம் அருந்திக்கொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார்.

இந்த தாக்குதலில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் உள்பட 12 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

உள்ள உள்ள ஒரு மதுபான விடுதியில் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து   தகவல் அறிந்த போலீசார் அந்த பாரை சுற்றி வளைத்தனர். பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Thousand Oaks: At least 12 killed at California bar shooting A gunman has opened fire at a bar in California killing at least 12 people, including a police officer.