திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் யானை மாரடைப்பால் உயிரிழந்தது

புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 1995ம் வருடம் , அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 7 வயதுடைய ஒரு பெண் யானையை வழங்கினார்.  ருக்கு என பெயரிடப்பட்ட அந்த யானைக்கு,  பெயரிடப்பட்டது.

கடந்த மாதம் கோவை மேட்டுபாளையத்தில் நடந்த யானை புத்துணர்வு முகாமில் கலந்து கொண்டு உற்சாகத்துடன் திரும்பியது, ருக்கு.

 

இந்த நிலையில், நேற்றிரவு கோவிலில் இருந்து யானை தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லும்போது நாய்கள் யானை அருகே ஓடியதாக கூறப்படுகிறது.

அப்போது, யானையும் பதிலுக்கு துரத்தியதில், சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் மீது மோதியதில் யானைக்கு காயம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து, யானைக்கு   மாரடைப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த கால்நடை மருத்துவர்கள் யானை ருக்குவுக்கு சிகிச்சை அளித்தனர்.

ஆனாலும் னும் சிகிச்சை பலனின்றி  நள்ளிரவு 12.30 மணிக்கு உயிரிழந்தது.  இது  பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.