சென்னை:
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்றார். இதற்காக கடந்த 25 நாட்களாக பலரும் சசிகலாவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் போயஸ் கார்டனுக்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சசிகலாவை நேரில் சந்தித்தார். அப்போது பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதற்கு சசிகலாவுக்கு திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார்.