மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சு வார்த்தை கிடையாது! சி.வி.சண்முகம்

சென்னை:

மேகதாது அணை  விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்து உள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் பிரச்னையை பேசித் தீர்க்கலாம் என்ற கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதற்காக தமிழக அரசு நேரம் ஒதுக்கும்படியும் கோரியிருந்தார்.

இந்த நிலையில், கர்நாடக அமைச்சரின் கோரிக்கையை  நிராகரித்த தமிழக சட்ட  அமைச்சர் சி.வி.சண்முகம், கர்நாடகாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேகதாது அணைக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி இருப்பதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், இன்று மாலை தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டமும்  நடைபெற உள்ளது. இந்த நிலையில், மேகதாது அணை குறித்து கர்நாடக மாநிலத்துடன் பேச்சு வார்த்தை  நடத்த வாய்ப்பில்லை என்று கூறி உள்ளார.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: There is no talks with Karnataka on the megatatu dam issue! said Minister CV Shanmugam, மேகதாது அணை விவகாரத்தில் மத்தியஅமைச்சரின் அறிவிப்பு ஆபத்தானது: ராமதாஸ்
-=-