முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது…. 13 மதகுகள் திறப்பு

தேனி:

முல்லை பெரியாறுஅணை 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் 142 அடியை எட்டி உள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து  பெரியார் அணையை சுற்றி உள்ள கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

முல்லை பெரியாறு அணையின் முழுக்கொள்ளவு152 அடி ஆகும். ஆனால், கேரள அரசு முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கூறி 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்க மறுத்து வந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு காரணமாக உச்சநீதி மன்றம் 142 தண்ணீர் தேக்க லாம் என கடந்த   2014ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி தற்போது 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கனமழை பெய்து வருகிறது.  இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், முல்லைப் பெரியாறு அணை 142 அடியை எட்டி உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் உள்ள 13 மதகுகளும் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் அணையில் இருந்து  2, 200 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதையொட்டி இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: The water level of Mullaperiyar dam reached 142 feet ... 13 Culverts opening, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.... 13 மதகுகள் திறப்பு
-=-