நெட்டிசன்:

 

ன்னிரண்டாம் வகுப்பில் குறைவாக மதிப்பெண் எடுத்த தனது மகளுக்கு முதல்வர் கோட்டாவில் முருத்துவ சீட் வாங்கிணார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. அதே போல பாஜக தமிழக தலைவர் தமிழிசை (தனது தந்தையின்) மொழிப்போர் தியாகி கோட்டாவில் மருத்துவ சீட் வாங்கினார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர்  மொரார்ஜி தேசாயின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நாம் அறிந்துகொள்வது அவசியம்.

 

மொரார்ஜி தேசாய் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது அவரது ஒரே மகள் பனிரெண்டாம் வகுப்பு பரீட்சை எழுதியிருந்தார். நன்றாக படித்திருந்தும் அந்த பரீட்சையில் அவர் தோற்றுவிட்டார்.

மறுகூட்டல் செய்து பார்த்தால் நிச்சயம் தான் வெற்றி அடைவோம் என்று நம்பி அந்த பெண் தனது தந்தையாரிடம் அதற்கு அனுமதி கேட்டார்.

தேசாய் அதற்கு சொன்ன பதில் அம்மா நீ ஒரு சாதாரண குடிமகனின் மகளாக இருந்தால் மறுகூட்டல் செய்தால் அதில் வெற்றி பெற்றால் யாரும் எதுவும் பேசமாட்டார்கள். ஆனால் நீ இந்த மாநில முதல்வரின் மகள் தப்பி தவறி மறுகூட்டலில் வென்று விட்டாய் என்று வைத்துக்கொள் தேசாய் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மகளை வெற்றியடைய செய்துவிட்டார் என்று எல்லோரும் பேசுவார்கள் எனவே நீ சிரமத்தை பார்க்காமல் இன்னொரு முறை படித்து பரீட்சை எழுது. இது தான் என் முடிவு என்று உறுதியாக கூறிவிட்டார்.

அந்த பெண் உலகம் அறியாத சிறிய பெண். வாழ்வில் அவளுக்கு அனுபவங்கள் எதுவுமே ஏற்பட்டது இல்லை. தாயில்லாத தனக்கு சகலமும் தந்தை என்று வாழ்ந்திருந்தவள் தான் உயிருக்கு உயிராக நம்பிய தந்தை கூட தன் மனதை புரிந்து கொள்ளாமல் தனது கஷ்டத்தை உணர்ந்து கொள்ளாமல் தன்னுடைய நிலையிலிருந்தே பேசிவிட்டார் என்பதை நினைத்து பார்க்கும் போது அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை.

துக்கத்தை சொல்லி அழ யாருமே இல்லாத நிலையில் தூக்க மாத்திரைகளை துணையென்று நாடி தற்கொலை செய்துகொண்டார்.

தனது ஒரே மகளை துடிக்க துடிக்க பறிகொடுத்த மொரார்ஜி தேசாய் என்ன சொன்னார் தெரியுமா?

நான் நேர்மையோடு வாழ்வதற்கு என் மகளை பலிகொடுத்து தான் ஆகவேண்டும் என்றால் என் மகளை கொடுப்பேனே தவிர நேர்மையை கைவிட மாட்டேன் என்றார்.

 

(வாட்ஸ் அப்)