திருச்சி:
சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது.

இதற்காக அதிகாலை 2.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்றம் மண்டபம் வந்தடைந்தார் பின்னர் அங்கு கொடி படத்திற்கு பட்டர் சுவாமிகள் மற்றும் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்யப்பட்டு சரியாக 5.05 மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகின்ற 29ஆம் அன்று நடைபெற இருக்கின்றது.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு சித்திரைத் தேரோட்டம் நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.