காதல் ரகசியம்: 8: ஐம்பெரும் விதிகளில் அருமையை உணருங்கள்!: டாக்டர். காமராஜ்

காதல் ரகசியம்: 8: ஐம்பெரும் விதிகளில் அருமையை உணருங்கள்!

க்தி மீது  இப்படி ஆத்திரத்தைக் கொட்டிக்கொண்டே சிவா காரை செலுத்திக்கொண்டிருந்தார்.  நிகழ்ச்சி நடக்கும் இடத்தை சென்றடையும் வரை இதேதான்..  விழா மண்டபத்தில் நுழந்து, அரக்கப்பரக்க விழா ஏற்பாட்டாளர்களிடம், மன்னிப்பு கேட்க முனைந்தார் சிவா.

அப்போது விழா ஏற்பாட்டாளரில் ஒருவர்.. “ஸாரி.. இன்று தலைமை தாங்க வேண்டிய முக்கியஸ்தர் விமானத்தை தவறவிட்டுவிட்டாராம். அவர் வர முடியவில்லை. ஆகவே விழா கேன்சல்” என்றார்.

அவ்வளவு நேரம், மனைவியிடம் உதிர்த்த  எல்லா கெட்ட வார்த்தைகளும் நினைவுக்கு வந்தது சிவாவுக்கு.

“அடடா.. தவறு செய்துவிட்டோமே” என்று மனதுக்குள் குமைந்தார் சிவா. அது மட்டுமல்ல.. மனைவியிடம் மன்னிப்பும்கேட்டார். ஆனால்’அதை ஏற்கும் மனநிலையில் சக்தி  இல்லை.

இதுவே, நான் ஏற்கெனவே குறிப்பிட்ட ஐம்பெரும் விதிகளை வகுத்துக்கொண்டு அதற்கேற்ப வாழ்ந்தால் இந்த இக்கட்டான சூழல் வந்திருக்காது.

மனைவியால் தாமதம் ஏற்பட்டாலும் அதற்காக ஆத்திரப்படாமல், அவரது சூழலை புரிந்துகொண்டிருக்கலாம்.

“சரி, தவறவிடக்கூடாத நிகழ்ச்சிதான்.. ஆனாலும் என்ன இன்னொரு முறை பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறியிருந்தால், மனைவியே தனது தாமதத்துக்கு வருத்தம் தெரிவித்திருப்பார். அதாவது அவர் மீது தவறு இல்லை என்றாலும்.

இங்கு நிகழ்ச்சியில் முக்கியஸ்தர் வராதது குறித்தும் கணவரிடம் வருத்தப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறியிருப்பார்.

ஆனால் கணவர் சக்தியின் ஆத்திரம்.. சுமுக நிலையை முற்றிலுமாக குலைத்துவிட்டது.

அதாவது இணையரிடம் காதல் மேலிட்டிருந்தால் ஆத்திரம் வராது.  இருவருக்குள்ளும் மனவருத்தமும் ஏற்பட்டிருக்காது.

சரிதானே…

விதிகளை வகுத்துக் கொண்டு வாழப் பழகுவதால் வேறு என்ன மாதிரியான நன்மைகள் ஏற்படும் என்பதையும் பார்ப்போம்.

சாதாரணமாக நாம் எல்லோருமே, பிறருக்காகவும்  சூழ்நிலைக்காகவும்தான் வாழநினைக்கிறோம். நமது செயலையும் நடவடிக்கைகளையும் அடுத்தவர் எப்படிப் பார்ப்பார்களோ என்கிற அச்சம் நமக்கு இருக்கிறது.

இதற்கு பதிலாக என்ன செய்யலாம்?

(அடுத்த அத்தியாத்தில் பார்ப்போம்)
English Summary
the secret of love series, part-8, Feel awesomeness in the age of fifty! dr kamaraj