அக்டோபர் 2வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: கோவை வானிலை மையம் தகவல்

சென்னை:

மிழகத்தில் அக்டோபர் 2வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதாகவும் கூறி உள்ளது.

நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்றுடன் முடிவடையும் நிலையில் மாநிலத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது
தேனியில், பெரியகுளம், அல்லிநகரம், உள்பட பல்வேறு பகுதிகளில் பல மணி நேரம் இடியுடன் கூடிய மழை பெய்ததால், மஞ்சலாறு, சோத்துப்பாறை, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது மேலும், சோத்துப்பாறை அணை நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. பகலில் கடும் வெப்பம் கொளுத்தும் நிலையில், இரவில் பெய்யும் மழையால், வெப்பம் தணிந்து, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இநத் நிலையில் அக். 2வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்க இருப்பதாகவும்,  இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

கோவை மாவட்டம் வேளாண் பல்கலைக் கழகத்தில் செயல்பட்டு வரும் வானிலை ஆராய்ச்சி மையம்  தலைவா் பன்னீா் செல்வம் கூறியதாவது,

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை  அக்டோபா் மாதம் 2வது வாரத்தில் தொடங்க உள்ளது.  அவை தமிழகம் முழுவதும் பரவலான மழைப்பொழிவை கொடுக்கும் கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை ஒருசில மாவட்டங்களில் சரிவர பெய்யாததால் குறிப்பிட்ட மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து விவசாயிகள் பயன்பெறுவா். விவசாயிகள் தற்போது முதலே தங்கள் பணிகளை தொடங்கலாம் என்று அவா் தொிவித்துள்ளாா்.

மேலும், மேற்கு மண்டலங்களான கோவையில் 363 மி.மீ., ஈரோடு – 370, திருப்பூா் – 281, நீலகிரி – 462 மி.மீ. மழை பெய்யக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சராசரியாக 788 மி.மீ. மழைப் பொழிவு இருக்கும் நிலையில் இந்த ஆண்டு 767 மி.மீ. மழையும், கடலூா் பகுதிகளில் 668 மி.மீ., நாகப்பட்டினம் பகுதியில் 924 மி.மீ. மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: The NorthEast monsoon is likely to start on October 2nd week: Coimbatore weather center information, அக்டோபர் 2வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: கோவை வானிலை மையம் தகவல்
-=-