சென்னை:
நீட் மசோதா விவகாரத்தில் ஆளுநர் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை அவமானப்படுத்தி இருக்கிறார் என்று தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்து, ஆளுநர் அச்சட்டமுன்வடிவினைத் திருப்பி அனுப்பி வைத்துள்ளார். இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை, நீட் மசோதா விவகாரத்தில் ஆளுநர் தனது வரம்பை மீறியிருக்கிறார்; தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை அவமானப்படுத்தி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.