தமிழகத்திற்கு பெருமை சேர்த்த முதல் பெண்

அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாக அதிகாரியாக தமிழ்நாட்டை சேர்ந்த திவ்யா சூர்யதேவரா நியமிக்கப்பட்டுள்ளார். உலகிலேயே முதன் முறையாக கார் நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாக அதிகாரியாக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
dhiya suryadevara
அமெரிக்காவில் உள்ள பிரபல கார் நிறுவனத்தின் சிஇஓ சங் ஸ்டீவன்ஸ் பணிக்காலம் முடிவடைந்த நிலையில் திவ்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை பிரபல கார்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் திவ்யா சூர்யதேவரா நிதி நிர்வாகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. திவியாவின் அனுபவம் மற்றும் செயல்திறன் தொழில் ரீதியாக முன்னேற்றம் அடையவும், வலுவான வர்த்தக முடிவுகளை உருவாக்கும் விதத்தில் இருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், செப்டம்பர் 1ம் தேதி திவ்யா நிதித்துறையில் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.

39 வயதான திவ்யா சூர்யதேவரா சென்னை பல்கலைக்கழகத்தில் வர்த்தகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படித்துள்ளார். அதனை தொடர்ந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். அதன்பின்னர் யு.எஸ்.பி.வங்கியிலும், ஜெனரல் ஆட்டோமொபைல் நிறுவனத்திலும் பணியாற்றினார்.

இதே போல் 2014ம் ஆண்டு மேரி பராரா பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டுள்ளார். மேரி மற்றும் திவ்யா அமெரிக்காவில் உள்ள கார் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிதிதுறையின் நிர்வாக அதிகாரியாக முதன் முதலில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோமொபைல் சார்ந்த நிறுவனங்களில் இதுவரை பெண்கள் யாரும் தலைமை பொறுப்புகளுக்கு நியமிக்கப்படாமல் இருந்தனர். அதனை தகர்த்து மேரி மற்றும் திவ்யா சாதனை படைத்ததுடன் பெண்களுக்கு பெருமையையும் தேடி தந்துள்ளனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-