திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப முடியாது!: நீதிமன்றம்  அதிரடி உத்தரவு

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்பக் கூடாது என்று சைதாப்பேட்டை கோர்ட் நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன், அவர் தேச விரோதமாக என்ன பேசினார் என்று தமிழக காவல்துறையிடம் அவர் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஐ.நா. சபையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி பேசிவிட்டு நேற்று அதிகாலை இந்தியா திரும்பினார். பெங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை  அவரை, குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர். பிறகு பெங்களூருவில் வைத்து கர்நாடக காவல்துறையினர் அவரை நேற்று முழுக்க விசாரித்தனர். பிரிவு அவரை தேச துரோக வழக்கில் கீழ் கைது செய்தனர். அரசுக்கு எதிராக பேசுவது, இந்தியாவிற்கு எதிராக வெளிநாட்டில் பேசுவது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.   மொத்தம்  மூன்று பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.

ஐ.நாவில் 200க்கும் அதிகமான உலக நாட்டு பிரதிநிதிகள் முன்  திருமுருகன் காந்தி, “தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்பது, மத்திய மாநில அரசுகள் சேர்ந்து நடத்திய துப்பாக்கி சூடு” என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று திருமுருகன் காந்தி  தமிழக காவலர்களால் பெங்களூருவில் இருந்து தமிழகம் அழைத்து வரப்பட்டார். . பிறகு சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அங்கு நீதிபதி பிரகாஷ் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன், அவர் தேச விரோதமாக என்ன பேசினார் என்று காவல்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞரிடம் சரமாரியாக கேள்விகளைத் தொடுத்தார்.

மேலும், ஏன் அவசரம் அவசரமாக திருமுருகன் காந்தியைக் கைது செய்தீர்கள். பிரிவினை பேச்சு வீடியோவை ஏன் 64 நாட்களாகியும் தாக்கல் செய்யவில்லையே, என்று கேள்வி எழுப்பினார்.

காவல்துறை திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க அனுமதி கோரி இருந்தது. ஆனால் திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப உத்தரவிட முடியாது என்று நீதிபதி பிரகாஷ் மறுத்து விட்டார். அதேபோல் போலீஸ் காவலில் அனுப்பவும் நீதிபதி பிரகாஷ் மறுத்து விட்டார். தேவையானால் 24 மணி நேரத்துக்குள் அவரை விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டார்.

Tags: The court ordered that Tirumurugan Gandhi can not be sent to jail, திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப முடியாது!: நீதிமன்றம்  அதிரடி உத்தரவு