ரபேல் ஒப்பந்தம் குறித்து பாராளுமன்ற கூட்டு குழு விசாரணை: காங்கிரஸ் வலியுறுத்தல்

டில்லி:

பேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பாராளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை என்று மக்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தியது.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற மக்களவை கடந்த 2 நாட்களாக அமளி துமளிப்பட்டு வருகிறது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை கோரி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில்  குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி, ராஜ பப்பர்,  சிபிஐ-இன் டி. ராஜா, ஆம் ஆத்மியின் சுஷில் குப்தா உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

அப்போது,  ‘நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும்’, ‘மோடியின் ஊழல் வெளிப்பட்டு விட்டது’, ‘அம்பலமாகிய ரபேல் ஊழல்’ போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை உயர்த்திப் பிடித்தபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பாராளுமன்ற கூட்டம் கூடியதும்,  காங்கிரஸ் எம்பி. மல்லிகார்ஜூன் கார்கே எழுந்து பேசினார். அப்போது,   தனியார் நிறுவனம் பயனடையவே ரபேல் போர் விமான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும் என்று பேசினார்.

இதன் காரணமாக மக்களவையில் மீண்டும் காரசார விவாதம் நடந்தது. அப்போது கார்கே, ரபேல் பிரச்சினை குறித்து ஜீரோ அவரில் பேச முயற்சித்தோம். ஆனால் அதுகுறித்து பேச மறுக்கப்பட் டது.  ரபேல் ஒப்பந்தத்தில்  பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. அதை ஜேபிசி ஆய்வு செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.
English Summary
The Congress has called for a joint parliamentary inquiry into the Rafael Agreement, Congress leader Mallikarjun Kharge urges