மோதலில் உடைந்த ஆயில் கப்பல்

சென்னை,

ட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி எண்ணூர் துறைமுகத்தில் 2 கப்பல்கள் மோதிக் கொண்டதால் கடலில் எண்ணை கசிந்தது.

இதனால் ஏற்பட்ட பிரச்சினை குறித்து நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி பேச தொடங்கினார்.

அவர் பேசி முடிப்பதற்குள் சபாநாயகர் தனபால் அவரை உட்கார சொன்னார்.

 

இதையடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேச சபாநாயகர் அனுமதி வழங்கினார்.

‘‘கடலில் எண்ணை கசிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் மீன்கள் செத்து மடியும் நிலை உருவாகி இருக்கிறது. மீனவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்நிலையை போக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது,

இதுகுறித்து மத்திய அரசிடம் நேற்று தெரிவிக்கப்பட்டு விட்டது. துறைமுக தலைவரிடமும் அறிவுறுத்தப்பட்டது என்றார்.

அதன்பின்னர் கப்பல் விபத்து நடந்தது பற்றி பேசத் தொடங்கினார்.

உடனே தி.மு.க. உறுப்பினர்கள் எண்ணை கசிவை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி பேசும்படி வற்புறுத்தினார்கள்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘‘ஒரு டன் குருடாயில் கடலில் கொட்டி கலந்தது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர், உயர் அதிகாரிகள் உள்பட பல்வேறு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கையை துரிதப்படுத்த வற்புறுத்தப்பட்டது.

அந்த கப்பல் இன்சூரன்சு செய்யப்பட்டிருப்பதால் அதனால் ஏற்படும் பாதிப்புக்கு நஷ்ட ஈடும் பெற முடியும். எண்ணையை அகற்றும் நடவடிக்கை நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் நிலைமை சீரடையும்’’ என்றார்.

எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 1.8 மைல் தொலைவில் எண்ணெய் ஏச்எப்ஓ எனப்படும் கனரக ஆயில்) ஏற்றி வந்த கப்பலுடன், துறைமுகத்தில் சரக்கு இறக்கிவிட்டு சென்ற மற்றொரு எல்பிஜி சரக்கு கப்பலுடன்  லேசாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக உடனடியாக இரு கப்பல்கள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து கப்பலில் இருந்து கனரக  ஆயில் கசிவது உடனடியாக தடுக்கப்பட்டது. இருந்தாலும் சுமார் 1 டன் அளவிலான ஆயில் கடலில் கலந்துள்ளது.

இதன் காரணமாக எண்ணூர் முதல் சென்னை வரை கடற்கரை முழுவதும் ஆயில் கட்டிகளாக தேங்கி உள்ளது. கடல் தண்ணீரும் கருப்பாக மாறி  மாசடைந்து உள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதிகளில் வசித்து வந்த ஆமைகள், மீன்கள் செத்து மிதக்கிறது.

கடலில் கலந்துள்ள எண்ணை படலத்துக்கு அகற்றும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.