மு.க.ஸ்டாலின் நல்ல நிர்வாகி! நடிகர் ரஜினிகாந்த்

Must read

சென்னை,

சிகர்களுடனான கடைசிநாளான இன்றைய சந்திப்பின்போது பேசிய ரஜினி திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குறித்தும் தனது கருத்தை பதிவு செய்தார்.

அப்போது, முதல் நாளில் அவர் பேசியது குறித்து கருத்து தெரிவித்த அரசியல் கருத்து குறித்து, இன்று பேசும்போது,  எனது பேச்சு இவ்வளவு சர்ச்சையாகும் என எதிர்பார்க்கவில்லை என்றும்,  சமூக வலைத்தளங்களில் சிலர் மிக கீழ்த்தரமாக என்னை விமர்சிப்பது வருத்தமளிக்கிறது என்று கூறினார்.

மேலும,  தமிழகத்தில் இருந்து என்னை தூக்கி போட்டால், நான் இமயமலையில் தான் போய் விழுவேன்.*

திமுக செயல்தலைவர்  தளபதி மு.க.ஸ்டாலின்  நல்ல நிர்வாகி. அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் நல்ல முடிவுகளை எடுப்பார் என்றும், இதே கருத்தை மறைந்த துக்ளக் ஆசிரியர் “சோ” என்னிடம் பலமுறை கூறியுள்ளார்.

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article