டெல்லி: குடியரசு தினத்தையொட்டி 1,091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் நாளை வெளியிடப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடு தெரிவித்து உள்ளார். ஏற்கனவே 2019ம் ஆண்டு  ஜூலை 17ந்தேதி தமிழ் உள்பட சில தென்னிந்திய மொழிகளில்  முதன்முறையாக மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.  இந்த நிலையில், தற்போது மீண்டும் மொழிபெயர்க்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குழு அமைத்துள்ளார்.

இந்த நிலையில்,  ஏற்கனவே மொழி பெயர்க்கப்பட்ட  1,091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் நாளை குடியரசு தினத்தையொட்டி வெளியிடப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார்.  அதன்படி, தமிழ், கன்னடம், உருது, இந்தி மற்றும் காரோ ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள தீர்ப்புகள் வெளியிடப்படுகிறது. இந்த தீர்ப்புகள் ஏற்கனவே மொழிமாற்றம் செய்யப்பட்டு,   உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மொழி பெயர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடு, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழியில் வெளியிடப்பட வேண்டும் என கூறினார். அதை வரவேற்று பிரதமர் மோடியும் டிவிட் பதிவிட்டிருந்தார். இதையடுத்து,  உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு அமைத்து தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த முயற்சியில் தொடர்பாக முதல்கட்டமாக, இந்தி, தமிழ், குஜராத்தி மற்றும் ஒடியா ஆகிய நான்கு மொழிகளில் தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட உள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே  தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட 1091 உச்சநீதிமன்ற தீர்ப்புகளை  குடியரசு தினத்தையொட்டி நாளை (26, 2023) தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வெளியிடுவதாக  அறிவித்துள்ளார். தொடர்ந்து இந்த தீர்ப்புகள்  உச்சநீதி மன்ற இணையதளத்திலும் வெளியாகிறது.