டில்லி:

தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்ட பயங்கரவாதி அப்துல் சப்ஹான் குரோஷி டில்லியில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2008-ம் ஆண்டு குஜராத்தில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 56 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.

இதற்கு சதி திட்டத்துக்கு பின்னால் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மென்பொறியாளர் அப்துல் சப்ஹான் குரோஷிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி வழக்குப்பதிவு செய்து தேடி வந்தது.

இந்நிலையில் டில்லி காஸிப்பூரில் பதுங்கியிருந்த குரோஷியை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து துப்பாக்கிகள், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பகளுடன் தொடர்பு இருந்ததற்கான ஆவணங்கள் சிக்கின.

குரோஷி கைது செய்யப்பட்டதன் மூலம் வரும் குடியரசு தினத்தன்று டில்லியில் மிகப்பெரிய தாக்குதல் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷ்னர் பிரமோத் குஷ்வாகா தெரிவித்தார்.