பசு பாதுகாப்பு விவகாரம்….தெலங்கானா எம்எல்ஏ பாஜக.வில் இருந்து விலகல்

ஐதராபாத்:

தெலங்கானா மாநிலம் கோஷா மகால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா சிங் லோத். தீவிர இந்துத்வவாதி. மேலும், பசு பாதுகாப்பிற்காக குரல் கொடுத்து வருபவர். அதோடு சர்ச்சையான கருத்துக்களையும் அவ்வப்போது தெரிவித்து வருவார். சமீபத்தில் தீவிரவாதத்துக்கு இஸ்லாம் தான் காரணம் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். பசு தேசத்தின் கடவுள் என்று அறிவிக்கும் வரை அதற்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபடும் இறைச்சி வியாபாரிகள் மீதான தாக்குதல் தொடரும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளாளர். பசு பாதுகாப்பு நடவடிக்கையில் முழு நேரமாக ஈடுபடபோவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில்,‘‘ பக்ரீத் பண்டிகைக்கு 3 ஆயிரம் பசுக்களை இறைச்சிக்காக பலியிட தயாராக வைத்துள்ளனர். பசு க்களை இறைச்சிக்காக கொண்டு செல்வதை போலீசாரும், அரசும் தடுக்க வேண்டும். தடுக்க தவறினால் நாங்கள் களத்தில் இறங்கி தடுப்போம்’’ என்றார்.

தனது ராஜினாமா கடிதத்தை தெலங்கானா பாஜக மாநில தலைவர் லட்சுமணனுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஐதராபாத் லோக்சபா தொகுதியில் எம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசியை எதிர்த்து போட்டியிட தகுதியான வேட்பாளர் என்று கருதப்பட்ட ராஜா சிங்கின் ராஜினாமா பாஜக.வு க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: telengana BJP MLA Raja Singh resigns from party over cow protection, பசு பாதுகாப்பு விவகாரம்....தெலங்கானா எம்எல்ஏ பாஜக.வில் இருந்து விலகல்
-=-