விழுப்புரம்: பிப்ரவரி 14ந்தேதி காதலர் தினத்தையொட்டி, அதை கொண்டாட பணம் இல்லாததால், ஆடுகளை திருடிச்சென்ற இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரோமானியாவில், காதலர்களுக்கான பாரம்பரிய கொண்டாட்ட தினம்,  பிப்ரவரி 24 அன்று கொண்டாடப்படும். பாபா டோகியாவின் மகனாக கருதப்படும் ரோமானிய நாட்டுப்புற கதாபாத்திரத்தின் நினைவாக இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, இந்த நாள், இந்தியாவிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை, இளைஞர்கள், இளைஞிகள் ஒருவருக்கொருவர் அன்பை பறிமாறிக்கொள்கின்றனர். பலர் காதலர் தினத்தை ஆடம்பரமாகவும் கொண்டாடு கின்றனர்.
இந்த நிலையில், காதலர் தினத்தை அதகளமாக கொண்டாட நினைத்த இரு இளைஞர்கள், அதற்கு தேவையான பணத்தை பெற, ஆடு திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பிரங்கிமேடு பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 20). செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (20). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். எனவே 2 பேரும் காதலர் தினம் கொண்டாட முடிவு செய்தனர். ஆனால் கையில் போதுமான பணம் இல்லை. எனவே ஆடுகளை திருடி அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து காதலர் தினம் கொண்டாட முடிவு செய்தனர்.
இதற்காக விழுப்புரம் அருகே மலையரசன் குப்பம் பகுதிக்கு சென்றனர். அங்கு முருகன் மனைவி ரேணுகா என்பவர் தனது வீட்டு வாசலில் 10 ஆடுகளை பட்டி அமைத்து அடைத்து வைத்திருந்தார். இவற்றில் 1 ஆட்டை மட்டும் 2 பேரும் திருடி மோட்டார் சைக்கிளில் செல்ல முயன்றனர்.
அப்போது ஆடு கத்தியது. சத்தம் கேட்டு ரேணுகா ஓடிவந்தார். அதிர்ச்சியடைந்த அவர் திருடன்… திருடன்… என உரக்க கத்தினார். இவரது அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடிவந்தனர். ஆடு திருடிய வாலிபர்களை மடக்கி பிடித்து கண்டாச்சிபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் காதலர் தினத்தை கொண்டாட ஆடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. காதலர் தினம் ஆடு திருட்டு வாலிபர்கள் கைது