சென்னை,

மிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் பொங்கலையொட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் 219 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 15 கோடி அதிகம் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் 6500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மது விற்பனை கடைகள் உள்ளது. பொதுவாக ஒரு நாளைக்கு சுமார் 50 கோடி அளவில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் மது விற்பனை 100 கோடியை தாண்டி விற்பனை ஆகி வருகிறது.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் 204 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது.  ஆனால், இந்த ஆண்டு மது விற்பனையானது கடந்த ஆண்டைவிட அமோகமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு பொங்கல் அன்று 127  கோடி ரூபாய்க்கும், அடுத்த நாளான மாட்டுப்பொங்கல் அன்று 92  கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது.

2 நாட்களிலும் சேர்த்து மொத்தம் 219 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மது கடைகள் குறைக்கப்படும் என்று ஜெ. முதல்வராக இருக்கும்போது அறிவித்த நிலையில், தற்போதைய எடப்பாடி தலைமையிலான அரசு மதுக்கடைகளை அதிகரித்து, மது குடிப்போரின் எண்ணிகையும் உயர்த்தி வருவது விற்பனை மூலம் தெரிய வருகிறது….