தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், மே 15ம் தேதி முதல், ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக, காவிரி உரிமை மீட்புக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

காவிரி தீர்ப்பாயத்தை கலைக்கக்கூடாது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன், காவிரி உரிமை மீட்புக்குழுவினர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 19 நாட்களாக நடந்து வந்த போராட்டம், நேற்று தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், போராட்டத்தை வேறுவடிவமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மே 15ம் தேதி முதல், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.