தமிழகத்தில் மேலும் 8 பசுமை வழிச்சாலைகள்: மத்திய மாநில அரசுகள் திட்டம்

சென்னை:

மிழகத்தில் மேலும் 8 பசுமை வழிச்சாலைகள் அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாநிலத்தின் தொழிற்வளர்ச்சியை கருத்தில்கொண்டு, சென்னை சேலம் பசுமைவழிச் சாலைகள் போன்று மேலும் 8 பசுமை வழிச்சாலைகளை அமைக்கும் முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சென்னை சேலம் பசுமை வழிச்சாலை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு வருகின்றனர். இந்த நிலையில் மேலும் 8 பசுமை வழிச்சாலைகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு,அதற்கான நிதியும் ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சாலை திட்டங்களும் அரசுக்கு பெரும் தலைவலியை கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது.

மத்திய அரசின் “பாரத்மலா பிரயோஜனா திட்டத்தின்” கீழ் இந்த பசுமை வழி விரைவுச் சாலை அமைக்க பட இருப்பதாகவும், இந்த திட்டத்திற்காக தமிழக முதல்வர் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அமைச்சர்  நிதின் கட்கரியை சந்தித்தபோதே உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது உறுதிபடுத்தப்பட்ட 9 பசுமை வழிச்சாலை திட்டங்களில், முதல் திட்டமான சென்னை சேலம் பசுமை வழிச்சாலை திட்டப்பணிகள் தொடங்கி இருப்பதாகவும், மேலும் 8 பசுமை வழிச் சாலை பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்காக   43 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகவும், அமைக்கப்பட உள்ள  பசுமை வழிச்சாலைகள் மூலம் அண்டை மாநிலங்களை எளிதில் சென்றடையும் வகையில்,  570 கி.மீட்டர் தூரம் சாலைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அந்த திட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பசுமை வழிச்சாலைகள் விவரம்:

  1. சென்னை சேலம் பசுமை விரைவு வழிச்சாலை
  2. கரூர் – கோயமுத்தூர் பசுமை விரைவு வழிச்சாலை
  3. மேலூர் – திருப்பத்தூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் வடிரை
  4. கும்பகோணம் – சீர்காழி, மகாபலிபுரம், புதுச்சேரி வரை
  5. ஒட்டன்சத்திரம் – பொள்ளாச்சி (திண்டுக்கல் வழி)
  6. மதுரை – தனுஷ்கோடி (பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரை 4 வழிச்சாலை,
  7. ராமநாதபுரம் முதல் தனுஷ்கோடி வரை 2 வழிச்சாலை) அதனுடன் மேலும் ஒரு பாம்பன் பாலம் அமைக்கவும் திட்டம்.
  8. சென்னை – சித்தூர் (ஆந்திரா)
  9. ஓசூ ர் ரிங் ரோடு (பெங்களூரு சேட்டலைட் டோல்டு ரிங் ரோடு)

இந்த சாலைப்பணிகள் குறித்து ஏற்கனவே நில அளவீடும் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், இந்த திட்டத்திற்காக எவ்வளவு விவசாய நிலங்கள் தேவைப்படும் என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் 9 பசுமைவழிச் சாலை திட்டங்கள் இருந்தாலும், 6 திட்டங்களை தற்போதைக்கு நிறைவேற்றும் எண்ணம் இல்லை என்று நெடுஞ்சாலைத்துறை  வட்டார அதிகாரி பவன் குமார் தெரிவித்து உள்ளார்.

இந்த திட்டங்கள் தொடர்பாக மேலும் ஆய்வுகள் நடத்த வேண்டியது உள்ளது என்றும், நிலங்கள் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் சிந்திக்க வேண்டியதிருப்பதாகவும் கூறி உள்ளார்.

ஏற்கனவே தொடங்கப்பட்ட சென்னை பெங்களூர் விரைவு பசுமை வழிச்சாலை பணிகள் 8 ஆண்டு களாக தொடர்ந்து வருவதாக கூறியவர்,  நாட்டில் பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலை களும் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

  Credit: The news minute
English Summary
Tamilnadu will see 8 more greenfield projects not just salem chennai highway/ “Acquiring lands from farmers is far cheaper than acquiring land along developed roads as they are likely to be more developed,” said a project manager