சென்னை:

கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் விடுமுறை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.\

நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என்றும் பொங்கல் திருநாளை கொண்டாடுபவர்கள் மட்டும் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மா.கம்யூ டி.கே. ரெங்கராஜன்:

அரசின் முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஜிதேந்திர சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

மகாவீர் ஜெயந்தி, தசரா போன்ற பிற நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு போன்று விடுமுறை நாட்களில் பண்டிகை நாட்கள் வந்தாலும் கட்டாய அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

 

நாம் தமிழர் கட்சி சீமான்:

அண்டை மாநில அரசு விடுமுறைகளுக்கும் தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தினை எந்த விதத்திலும் மத்திய அரசு மதிப்பதில்லை.

 

 

 

 

 

 

பழ நெடுமாறன்:

இதேபோன்று, பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தினை மத்திய அரசு புறந்தள்ளுகிறது.

 

இ.கம்யூ முத்தரசன்:

பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என்ற அறிவிப்பு தமிழகத்தினை வஞ்சிக்கும் செயல். இந்த அறிவிப்பினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.