டெல்லி: தமிழ்நாடுஅரசு இந்த ஆண்டு கடன் வாங்க அவசியம் இருக்காது என்று கூறிய தமிழ்நாடு  நிதியமைச்சர் பிடிஆர் ”ஒரு வேலை உலக பொருளாதார மந்தநிலை வந்தால் அன்றைக்கு கடன் வாங்குவதற்கான தேவை ஏற்படும் என்று கூறினார்.

டெல்லி சென்றுள்ள தமிழக நிதியமைச்சர் பிடிஆர், அங்கு  வெளியுறவுத்துறை அமைச்சர் அங்கு நிதிதுதறை செயலரை சந்தித்து பேசியதுடன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள், மீனவர்கள் பிரச்சினை உள்பட பல நிகழ்வுகள் குறித்து தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளை விவரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,   சென்ற முறை நான் டெல்லி வந்த போது வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து ஒரு சில கோரிக்கைகளை வைத்திருந்தேன். அதில் சில முன்னேற்றம் இருந்தது. அது தொடர்பாக சந்தித்து நன்றி தெரிவிக்க வந்தேன் என்றார்.

மேலும்,  உலக பொருளாதார கவனம் இந்தியாமீது, கூடுதலாக உள்ள சூழலில், முதலீடுகளை ஈர்க்க எடுக்கும் முயற்சிகளில் மத்திய அரசுக்கும் பங்கு உள்ளது. அந்த அடிப்படையில் விதிமுறைகள் மற்றும் மரபுகள் தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைத்தேன். உடனடியாக கவனம் செலுத்தி செய்து வருவதாக உறுதி அளித்துள்ளார்.

நமது  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஏற்கெனவே அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் தூதராக இருந்தவர். வெளியுறவு, முதலீடு ஆகியவற்றின் முக்கியத்துவம் அவருக்கு நன்றாக தெரியும் ஆகவே தொழில்முறையாக செய்து தருகிறேன் என்றார்.

தமிழ்நாட்டில்,  வரும் திங்கட்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், தமிழ்நாட்டின் நிதிநிலைமை மிகவும் பாதிப்புக்குள்ளான சூழலில் திமுக ஆட்சிக்கு வந்தபோது இருந்தது. அதை படிப்படியாக திருத்தி வருவாய் மற்றும் நிதி பற்றக்குறையை குறித்துள்ளோம்.

31ஆம் தேதி மார்ச்சுக்குள் கடன் வாங்கும் எல்லையில் சில வேறுபாடுகள் உள்ளது. இந்தாண்டுக்கு எங்களுக்கு கடன் வாங்கத் தேவையில்லை, கடன் வாங்கும் எல்லை எண்ணிக்கை முதலில் ஒரு எண் சொல்லப்பட்டு பிறகு அது வேறு எண்ணாக தமிழ்நாட்டுக்கு குறைக்கப்பட்டது. திடீரென்று சொல்லி குறைக்கப்பட்ட எல்லையே எங்களுக்கு போதுமானது என்றாலும், எங்கள் உரிமையை இழந்துவிடக்கூடாது என்பதற்காக சில தெளிவுகளை அளிக்க வந்துள்ளேன் என்றவர்,  ஒவ்வொரு நிதிக்குழுவிலும் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய பங்கினை குறைத்துக் கொண்டே போகிறார்கள்.

உலகப்பொருளாதார மந்த நிலை வந்தால் கண்டிப்பாக நமது பொருளாதாரம் பாதிக்கப்படும். நாடுகளை பொறுத்து நாடுகளின் பாதிப்பு வேறுபடும். ஆனால் தற்போது பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என நான் கருதுகிறேன்.

இவ்வாறு கூறினார்.