சென்னை:

ல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மின்வாரிய தொழிலாளர்கள் வரும் 16ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளர்.

இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக 10 தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற பல முறை அரசுக்கு மனு கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கா ததால்,  மின்வாரிய அனைத்து தொழிற் சங்கத்தினரும் இணைந்து ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து வரும் 16ந்தேதி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய மின்வாரிய கூட்டுக்குழு தலைவர், கடந்த 2015ம் ஆண்டு முதல்   மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதுகுறித்து, அரசு முடிவு அறிவிக்காவிட்டால், வேலைநிறுத்தம் செய்வோம் என்று கடந்த மாதம் அறிவித்தோம்.

அதைத்தொடர்ந்து கடந்த  மாதம் 22-ந் தேதி அன்று தொழிலாளர் ஆணையரிடம் இரு தரப்பினருக்கு இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது.   அப்போது வரும் 12-ந் தேதி ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் காணப்படும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

ஆனால்,  இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், முன்பு மின்சார வாரிய ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இது ஒப்பந்தத்தை மீறிய செயல். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வரும் 16-ந் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய 10 சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், வரும் 12-ந் தேதிக்குள் ஊதிய உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் குறித்து அறிவிக்காத பட்சத்தில்,  வரும் 16-ந் தேதி வேலை நிறுத்தம் செய்யப்படும் இன்றும், இந்த வேலை நிறுத்தம் காலவரையற்ற வேலைநிறுத்தமாக மாறவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.