காபூல்:
ருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பெரும் வெள்ளம், மிகப்பெரிய அளவில் உயிர்ச் சேதத்தையும், பொருட் சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளிலும், அதைத் தொடர்ந்து சீனா, இந்தியாவிலும் கனமழை பெய்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானிலும் நேற்று முன்தினம் கனமழை பெய்தது.

இந்நாட்டின் நியூரிஸ்தான் மாகாணத்தில் உள்ள கம்தீஷ் மாவட்டத்தில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில், ஏராளமான வீடுகள் மூழ்கின. இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு150 பேர் பலியாகிவிட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். மேலும்., 150 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புப் படைகள் ஈடுபட்டுள்ளன. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.