ராமேஸ்வரம்:
தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயில் இன்று அக்னி தீர்த்த கரையில் ஸ்ரீராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்த வாரி உற்ஸவம் நடைபெற்றது.

தை அமாவாசை நாளில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்து காலை 5:00 முதல் 5:30 வரை ஸ்படிகலிங்க பூஜையும், இதனை தொடர்ந்து கால, சாயரட்சை பூஜைகள் நடைபெற்றன.

இதுகுறித்து கோயில் துணை ஆணையர் மாரியப்பன் தெரிவிக்கையில், இன்று மதியம் 12:00 மணிக்கு அங்கு கூடியிருக்கும் பக்தர்களுக்கு கோயில் குருக்கள் தீர்த்தம் வாரி கொடுக்கும் கொடுக்கும் உற்ஸவம் நடக்கிறது. அப்போது ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவார்கள்.

மாலை 5:30 மணிக்கு மண்டகபடியில் தீபாராதனையும், இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன்ஸ்ரீ ராமர் புறப்பாடும் நடக்கும் என கூறினார்.