- Advertisement -spot_img

TAG

தொடர்கள்

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: திலோத்தமை! துரை நாகராஜன்

அத்தியாயம்-9 திலோத்தமை ஒயிலாக முல்லைக் கொடிபோல் நிற்கிறாள் திலோத்தமை.  கண்கள் என்ற பெயரில் இரு குறுவாள்களும், கன்னம் என்ற பெயரில் நேர் பாதியில் நேர்த்தியாய் வகுந்த இரு மாங்கனித் துண்டுகளையும் வைத்திருக்கிறாள்.  அவள் நெற்றியில் கற்றையாய்...

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: சர்மிஷ்டை! துரை நாகராஜன்

அத்தியாயம்: 8 சர்மிஷ்டை  சர்மிஷ்டை இப்படி அலங்காரம் செய்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன.  ஓடுகிற நதியின் உற்சாகத்துடன் பட்டாம்பூச்சியைப் போல் குருஷேத்திர வீதியெங்கும் சுற்றித் திரிந்த காலத்தில் பண்ணிய அலங்காரம். தந்தை பார்த்து மகிழ ஒரு...

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: அம்பை! துரை நாகராஜன்

அத்தியாயம்: 7 அம்பை அஸ்தினாபுரமே உறங்குகிறது.  அந்தப்புரத்தை காவல் காக்கும் அலிகளும் தூங்கி விட்டனர். இதற்காகவே காத்திருந்ததுபோல் படுக்கையிலிருந்து எழுகிறாள் அம்பை. நாலைந்து தீப்பந்தங்கள் காற்றிலே நடித்துக் கொண்டிருக்கின்றன. "அம்பிகை... அம்பாலிகை.." காற்றுக்கும் கேட்காத குரலில் தங்கைகள் இருவரையும் அழைக்கிறாள். "அக்கா.." "இங்கிருந்து தப்பிவிடலாம்.." "தப்பித்துப்...

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: சகுந்தலை! துரை நாகராஜன்

அத்தியாயம்: 6 பிரபஞ்சத்திலுள்ள அழகையெல்லாம் கொட்டி ஒரு சிலை வடித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தாள் அவள். ஆடை கட்டியிருக்கத்தான் செய்கிறாள். அவைகளால் அந்த அழகைத்தான் ஒளித்து வைக்க இயலவில்லை. அவள் எறும்புக்கும் தீங்கு...

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: ஊர்வசி! துரை நாகராஜன்

அத்தியாயம்- 5 அந்த நேரத்திலும் ஊர்வசி சூரியனை நன்றியோடு பார்த்ததற்குக் காரணம் இருக்கிறது.  சூரியன் மட்டும் சாபம் தரவில்லை என்றால் ஊர்வசி பூலோகத்துக்கு வந்திருக்கப் போவதில்லை.  அவள் அழகைப் பார்த்த அரக்கர்களுக்கு அவளை அனுபவிக்கும்...

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: அகலிகை! துரை நாகராஜன்

அத்தியாயம்: 4   அகலிகை அவள் நாட்டியம் ஆடுகிறாள்.  ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருக்கிறான் ஒரு மஹா புருஷன்! அவன் அபாரம் என்கிறான். அனேகமாய் அவன் கண்கள் கச்சை கட்டிய தாமரை மொட்டுக்களைத் துகில் உரித்து கொண்டிருக்கலாம். ...

வாங்க தமிழ் பழகலாம்: என்.சொக்கன்

அத்தியாயம்:  10 'உங்க வீடு எங்கே இருக்கு?' 'காந்தி பூங்காவுக்கு அருகாமையிலே!' தினசரிப்பேச்சில், எழுத்தில் 'அருகாமை' என்ற சொல்லைச் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம். அதன் பொருள் என்ன? 'அருகு' என்றால் 'பக்கம்' என்று பொருள். ஆக, 'நான் பூங்காவுக்கு...

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: சூர்ப்பனகை! துரை.நாகராஜன்

அத்தியாயம்: 3 சூர்ப்பனகை அடிக்கடி கோதாவரி ஆற்றில் இறங்கி வெகுநேரம் நின்று கொண்டிருப்பாள். வெகுநேரம் என்றால், உடம்புக்குள் எரிகிற காமம் அணைந்து போகிறவரை, இதற்காகவே அவள் பஞ்சவடிக்கு வருவாள். அவள் வசிக்கிற தண்டகாரண்யம்  வழியாகத்தான்  கோதாவரி  ஓடுகிறது  என்றாலும்,  காற்றில்  ஒன்றை யொன்று உரசியபடி ஆடும்ஆச்சா பனை மரங்களைப் பார்த்துக் கொண்டே நனையும்போது ஏற்படுகிற திருப்தி  - அவள் கணவனோடு சேர்ந்திருக்கும் போது  கிடைத்ததாகவே  எண்ணுகிறாள்.   இந்த உணர்வு வெறும்பி ரமையாகக்கூட  இருக்கலாம். அதனால் என்ன? அன்றும் பஞ்சவடிக்குத்தான் வந்து கொண்டிருக்கிறாள்.  அது மார்கழி.  எலும்பையும் ஊடுருவுகிற குளிர்மாதம். நீர்பறவைகளும் குளிருக்குப் பயந்து நீரில் குதிக்காமல் கரைகளில் குந்தியிருக்கின்றன.  பனி ஒத்துழைக்காததால் தாமரையின் இதழ்கள் கருகி உதிர்ந்து விட்டதால் மிச்சமிருப்பது வெறும் தண்டு. பஞ்சவடியை நெருங்கிவிட்டதற்கு அடையாளமாய் தாழைமலர் வாசம் நாசியை வருடுகிறது. தூரத்தில் வரும்போதே கோதாவரிக் கரையில் புதிதாக பர்ண சாலை  முளைத்திருப்பதைக் கவனித்து  விட்டாள்...

வாங்க தமிழ் பழகலாம்: என்.சொக்கன்

அத்தியாயம்:  9 பெங்களூர் + இல் = பெங்களூரில். குழப்பமே இல்லை. அந்த ஊரின் பெயரை ‘பெங்களூரு’ என்று மாற்றியபின், ஒரு குழப்பம் தொடங்கியது: பெங்களூரு + இல் = பெங்களூருவில்? அல்லது பெங்களூரில்? எது சரி? நான்...

வாங்க தமிழ் பழகலாம்! என்.சொக்கன்

அத்தியாயம்: 8 புலவர் ஒருவர் அரசனைப்பார்த்து, 'அறிவில்லாதவனே' என்றார். அரசன் மகிழ்ந்தான், அவருக்குப் பரிசுகளைத் தந்தான். மற்ற புலவர்கள் குழம்பிப்போனார்கள். 'அரசே, உங்களை அறிவற்றவர் என்று அவர் சொல்கிறார், ஆனால் நீங்கள் அவருக்குப் பரிசு தருகிறீர்களே' என்றார். அரசன்...

Latest news

- Advertisement -spot_img