ரஷ்ய துணை பிரதமருடன் சுஸ்மா சுவராஜ் சந்திப்பு

மாஸ்கோ:

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 2 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். பஅங்கு ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசோவை மாஸ்கோவில் சந்தித்து பேசினார்.

இது குறித்து வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘ ரஷ்யா&-இந்தியா இடையிலான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவு ஆணையத்தின் மாநாடு மாஸ்கோவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசோவ் மற்றும் சுஷ்மா சுவராஜ் இருவரும் பங்கேற்றனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்போது சுஷ்மா சுவராஜ் பேசுகையில்,‘‘ இந்தியாவில் 2017-ம் ஆண்டு வரை ரஷ்யா 1,800 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. அதேபோல் ரஷ்யாவில் இந்தியா 1,300 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. 2 நாடுகளும் இணைந்து 2025-ம் ஆண்டிற்குள் 3,000 கோடி டாலர் முதலீட்டுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இப்போதே அந்த இலக்கு எட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார். .

பின்னர் துணை பிரதமர் யூரி போரிசோவுடனாவுடன் சுஷ்மா ஆலோசனை மேற்கொண்டார்.




English Summary
Sushma Swaraj meets with Russian Deputy Prime Minister