பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது கறுப்பு பணத்தில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதி மன்றம் முடிவு செய்துள்ளது.

modi_audio

பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் புஷன் தொடர்ந்த இந்த வழக்கு வரும் வெள்ளியன்று விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இதே வழக்கு தொடர்பாக பேசிய போது, பிரதமர் நரேந்திரமோடி கறுப்பு பணத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். அதற்கு ஆதாரமாக அவர் கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஆதித்ய பிர்லா மற்றும் சகாரா குழுமங்களில் வருமானவரித்துறை நடத்திய ரெய்டுகளில் கிடைத்த தகவல்களை காட்டியுள்ளார்.
அந்த தகவகளின்படி ஆதித்யா பிர்லா குழுமம் அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடிக்கு 25 கோடி ரூபாய்கள் லஞ்சமாக கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ” ஒரு இந்திய பிரதமர் கறுப்பு பண முதலைகள் லிஸ்ட்டில் இடம்பெறுவது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை” என்று தெரிவித்துள்ளார்.
அந்த ஆவணங்களை ஆய்வு செய்த ஜனதா-கா-ரிப்போர்ட்டர் என்ற இணைய பத்திரிக்கை அதில் சகாரா குழுமம் “ரூபாய் 40 கோடி பணம் குஜராத் முதல்வர் மோடி, மத்தியபிரதேச முதல்வர் மற்றும் சாட்டிஸ்கர் முதல்வர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
இந்த வழக்கை திசைதிருப்பவே பிரதமர் மோடி கறுப்புப்பண ஒழிப்பு என்ற பெயரில் தற்போது நாடகமாடி வருவதாக தெரிவித்துள்ளார்.