மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு-  இடிக்க சுப்ரீம் கோர்ட் தடை

Must read

மும்பை:
கார்கில் போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் வாரிசுகளுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பை இடிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

 ஆதர்ஷ் குடியிருப்பு அசோக் சவான்
ஆதர்ஷ் குடியிருப்பு உடன் முன்னாள் முதல்வர்  அசோக் சவான்

மும்பை கொலபா கடற்கரை பகுதியில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்காக  அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதை கட்டியதிலும், வீடுகளை ஒதுக்கீடு செய்ததிலும் விதி மீறல்கள்,  ஊழல் நடந்ததாக  புகார்  எழுந்தது.  பரபரப்பாக நடைபெற்ற இந்த ஊழல் காரணமாக அப்போதைய முதல்வர் அசோக் சவான் பதவி விலகினார்.
இது வழக்கு மும்பை ஐகோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
இதில், முன்னாள் முதல்–மந்திரி அசோக் சவான்  உள்ளிட்ட 13 பேர் குற்றவாளிகள் என  சி.பி.ஐ.  குற்றப்பத்திரிகை  தாக்கல்  செய்தது.  வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு கட்டிடத்தை இடிக்க  கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. மேலும்  சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய மராட்டிய அரசுக்கு   3 மாதம்  கால அவகாசம் வழங்கியது.
மும்பை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து உத்தரவை எதிர்த்து ஆதர்ஷ் வளாக  குடியிருப்போர்  சங்கத்தின்   சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை  விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி திபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ஆதர்ஷ் கட்டிடத்தை இடிக்க தடை விதித்துள்ளது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ள

More articles

Latest article