எஸ்சி, எஸ்டி பிரிவில் கிரிமிலேயர்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டில்லி:
ரசு வேலைவாய்ப்பில் கிரீமிலேயரைப் பயன்படுத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது.

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான இட ஒதுக்கீட் டில், உயர்வருவாய் பிரிவினரின் சலுகைகளை தவிர்க்கும் வகையில்  கிரிமிலேயர் முறையை கடைபிடிக்கும் படி ஏற்கனவே உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து,  அரசு வேலை மற்றும் பதவி உயர்வு போன்றவற்றிலும், கிரீமிலேயர் முறையை கடைப்பிடிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்து.

இந்த வழக்கு  உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், இந்த வழக்கில் தற்போது எந்தவித  இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறினர்.

மேலும், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து  7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஆய்வு செய்ய வேண்டியது இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

Tags: Supreme Court refuses to pass interim order on plea on reservation to SC/ST in government jobs, எஸ்சி., எஸ்டி பிரிவில் கிரிமிலேயர்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு