டெல்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரம் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம அமலாக்கத்துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரம் தொடர்பாக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் முன்னாள்  மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

சுமார் 3 மாதங்களாக சிறையில் வாடும் சிதம்பரம் தரப்பில் ஜாமின் கோரி நீதிமன்றங்களை நாடி வரும் நிலையில், சிபிஐ கைது செய்த வழக்கில், உச்சநீதி மன்றம் சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கி உள்ளது.

அதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை  வழக்கிலும் ஜாமின் கேட்டு, சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமின் மனுவை சிபிஐ நீதிமன்றம், டெல்லி உயர்நீதி மன்றம் நிராகரித்த நிலையில், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு கடந்த 18ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இந்த  மனுவை உடனே விசாரிக்க மறுத்த உச்சநீதி மன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசரணையைத் தொடர்ந்து, ஜாமின் மனுமீது பதில் அளிக்கும்படி, அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதி மன்றம் வழக்கை நவம்பர் 26ந்தேதி தள்ளிவைத்த  உத்தரவிட்டது.