படத்தில் மொத்தம் 4 கதைகள், இது ஏன் நடக்கின்றது, இது ஏன் நடக்கவில்லை என்ற பல கேள்விகளுக்குள் நம்மை ஒன்ற வைக்கிறது இந்த சூப்பர் டீலக்ஸ்.

5 சிறுவர்கள் ஆபாச படம் பார்க்க , அந்த படத்தில் ஒருவனுடைய தாய் (ரம்யா கிருஷ்ணன்) வர அதை பார்த்து அம்மாவை கொல்வதற்கு புறப்படும் சிறுவன் .

சமந்தா தன் பழைய காதலுனுடன் கள்ள உறவில் இருக்கும் போது காதலன் இறந்துவிட, அதில் சிக்கி கொள்வது.

மனைவி தன் முன்னாள் காதலனோடு எதற்காக உறவு வைத்துக்கொண்டாள், தன்னிடம் இல்லாத எது அவனிடம் இருக்கிறது என மருகும் ஃபஹத் ஃபாசில்

விஜய் சேதுபதி தன் மனைவியை விட்டு ஓடி போய் நீண்ட வருடங்கள் கழித்து தன் மகனை பார்க்க திருநங்கையாக வீட்டிற்கு வரும் சூழல்

இப்படி பல கதைகளை மய்யபடுத்தி விளக்குவது தான் சூப்பர் டீலக்ஸ். வசனம் தான் படத்தின் மிகப்பெரிய் ப்ளஸ்.

” ஜாதி வெறி எவ்வளவு கொடியதோ அதே போல் நாட்டு பற்று, மொழி பற்று அனைத்தும் கொடியது தான், ஜாதி வெறி தவறு என்றால் இதுவும் தவறு ” “ஏன் காஜி நீ ஏண்டா இவ்வளவு காஜியாக இருக்க’, ” “‘என் பொண்டாட்டி பத்தினி அவ சாபமே பலிக்காது, இவ சாபம் எங்க பலிக்கும்’ ” ” லட்சம் பேர் ஆபாச படம் பார்க்கின்றனர், அவர்களுக்கு இல்லாத குற்ற உணர்வு அதில் நடித்தவருக்கு ஏன் வரவேண்டும் ” போன்ற வசனங்கள் ரசனைக்குரியது.

வாழ்க்கை வாழ்வதற்கே, அதை வாழ்ந்து தான் ஆகனும்னு உணர்த்துகிறது சூப்பர் டீலக்ஸ். அடிப்படையில் காமமும் ஆசையுமே வாழ்வை நகர்த்திச் செல்கின்றன, மற்றபடி வாழ்வில் நடக்கும் எல்லா சம்பவங்களுமே தற்செயலானவை என்பதையே இந்தப் படம் உணர்த்துகிறது