வங்கதேச தேர்தலில் அபார வெற்றி: 4வது முறையாக ஆட்சியை பிடித்தார் ஹசீனா

டாக்கா:

ங்காள தேசத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதில் போட்டியிட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா வரலாறு காணாத வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளார். இதன் காரணமாக 4வது முறையாக அவர் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

300 தொகுதிகளை கொண்ட வங்காள தேச தேச நாடாளுமன்றத்தில் ஒரு தொகுதியில், வேட்பாளர் இறந்ததால், ஓட்டு பதிவு ஒத்தி வைக்கப்பட்டது. மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு  நேற்று தேர்தல்  நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் கட்சிக்கும், தற்போதைய பிரதமர் ஹசீனா கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

மொத்தம்  1,848 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 40 ஆயிரத்து 183 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.  நடைபெற்றது.

60,000 பாதுகாப்புப் படையினர், பாதுகாப்புக்காக உஷார் நிலையில் வைக்கப்பட்l நிலையிலும்  பல இடங்களில் கலவரங்கள் நடைபெற்றது. காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாயினர். கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற மோதலிலும் 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையிலும் வாக்குப்பதிவுகள் தொடர்ந்தன.

நேற்று மாலை வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. .  299 தொகுதிகளில் 287 தொகுதிகளை கைபற்றி ஆளும் அவாமி லீக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது/ அதைத்தொடர்ந்து  பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான, அவாமி லீக் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

முக்கிய எதிர்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி வெறும் 6 இடங்களை மட்டுமே கைபற்றியுள்ளது. தேர்தல் முடிவை புறக்கணிப்பதாக எதிர்கட்சி அறிவித்துள்ளது.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 4வது முறை பிரதமர், 4வது முறை பிரதமர் பதவி, Bangladesh, Bangladesh polls, election commission, election victory, fourth time, Hasina will oath, Kalitha jia, Khaleda Zia, Sheikh Hasina, ஆட்சியை பிடித்தார் ஹசீனா, வங்கதேச தேர்தல், ஹசீனா அபார வெற்றி
-=-