17 ஆண்டுகளுக்கு முன்னால் என் நாட்குறிப்பில் இப்படிச் சில வரிகள் காணப்படுகின்றன :-

வலிகள் தாங்கியே
வாழ்க்கை கழியும்

வலிகள் பலவிதம்
வகைகள் வேறு அளவுகள் வேறு
தாக்கும் சூழலின் தன்மைகள் வேறு

ஆயினும் என்ன…
அனைத்தும் வலிதான்

வலிகள் மறையுமுன்
வாழ்க்கை மறையும்

வலி என்பது வாழ்வின் பகுதி
வலியும் சேர்ந்தே வாழ்க்கை என்றாகும்
வலிகள் பழகி வாழக் கற்றபின்
வலிகள் விடுபடும் வாழ்க்கை பிடிபடும்!

இது என் வலி மட்டுமன்று. நான் என்பதும், நீ என்பதும் வெறும் குறியீடுதான். மானுட வலியை இத்தொடர் பேசும் – வலிகளுக்கான தீர்வை நோக்கி!!

அன்புடன்
– சுபவீ –