மாணவி பலாத்காரம் விஷயத்தில் பிரதமர் மவுனம் ஏன்? ராகுல்காந்தி டிவிட்

டில்லி:

ரியானா மாணவி பலாத்காரம் விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், இந்த சம்பத்திற்காக  இந்தியா வெட்கி தலை குனிய வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்த அரியானா  மாணவி ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட் டுள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

அயானாவின் ரிவாரி மாவட்டத்தில் கடந்த 12 ஆம் தேதி மாலை பயிற்சி வகுப்புக்குச் சென்று கொண்டிருந்த சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்த கல்லூரி மாணவியை வழிமறித்து காரில் வந்த   ஒரு கும்பல் கடத்திச் சென்று, மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் மாணவியை கனினா என்ற பகுதியில் உள்ள பேருந்து நிறுத்ததில் காரிலிருந்து கீழே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை  ஏற்ப்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாயார் கூறுமபோது,  சிபிஎஸ்இயில் அதிக மதிப்பெண் பெற்றதற்காக குடியரசுத் தலைவர், பிரதமரிடம் பாராட்டுப் பெற்ற தமது மகள் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெண் குழந்தைகளுக்கு கல்வி தருவோம், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்ற பிரதமரின் கூற்று எப்படி சாத்தியமாகும் என  கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து பாரதியஜனதா அரசு இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. பிரதமரும் இதுகுறித்து மவுனம் சாதித்து வருகிறார்.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த சம்பவம் குறித்து டிவிட் செய்துள்ளார். அதில், அரியானாவில் நடைபெற்ற கூட்டு பலாத்காரம் சம்பத்திற்கு இந்தியா வெட்கி தலை குனிய வேண்டும்.  பிரதம மந்திரி, உங்கள் அமைதி ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்தியாவின் பெண்களின் பாதுகாப்பற்ற நிலைக்கும், கற்பழிப்புக்கள் செய்பவர்கள் சுதந்திரமாக சுற்றி திரிய அனுமதிக்கிறதுக்கு அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: prime minister, Rahul Gandhi tweet, student gang raped, your silence is unacceptable, மாணவி பலாத்காரம் விஷயத்தில் பிரதமர் மவுனம் ஏன்? ராகுல்காந்தி டிவிட்
-=-